SAC ஒரு வளர்ந்து வரும் ஹீரோவிடம் கதை சொல்கிறார்.
SAC: உங்களுக்கு ஒரு சூப்பர் கதை வச்சுருக்கேன்.
நடிகர்: ம்ம்.. சொல்லுங்க... (தலைவிதி)
SAC: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.
நடிகர்: (ஆரம்பிச்சுட்டார்... கிழிஞ்சது லம்பாடி லுங்கி.) சூப்பர் சார்,.
SAC: நீங்கதான் அந்த ரசிகன்.
நடிகர்: (ஆத்... சரி... அழிக்கனும்னு முடிவு பண்ணிட்டாரு...) கலக்குறோம் சார்.
SAC: இதுல விஜய் கூட Guest Role பண்றார்.
நடிகர்: (இது வேறயா... ) எப்படி சார்... out of the world sir
SAC: விஜயோட introduction scena சொல்லுறேன் கேளுங்க
நடிகர்: (டேய் ஹீரோ நானா அவனாடா) ஓஹோ பேஷ் பேஷ் தில் தூள் அட்டகாசம் அமர்க்களம். அதுக்கு முன்னாடி heroin யாரு சார்
SAC: (விஜய் பெயர சொல்லி உன்ன புடிச்ச மாதிரி தான் அவங்களையும் தேடனும்.) புது முகம் தான். ஆனா நம்ம கதை இந்திய திரை வரலாற்றிலேயே ஒரு திருப்பு முனை.
நடிகர்: (என்ன தெரு முனைல நிக்க வைக்காம விட மாட்டார் போல இருக்கே) திருப்புமுனை u mean u turn.
SAC: No No Turning point.. இந்த படத்துல lovers ரெண்டு பேரு. அவங்களுக்குள்ள மோதல். அதை 12 வது ரீலுல தளபதி solve பண்ணுறார். அங்க உடனே நீங்க விஜய புகழ்ந்து பாடரீங்கே. ஒரே நாளுல எல்லா விஜய் பான்சும் உங்களுக்கு பேன் ஆகிடுவாங்க.
நடிகர்: (கடைசி வரைக்கும் கதைய சொல்ல மாட்டேன்ங்குரான்) பப்ச்.. லவ் சீன். (உங்க படம்னா ஒரு ரேப் சீனாவது இருக்கும்னு நினைச்சேன். )
SAC: க்ளைமாக்ஸ்ல...
நடிகர்: (அதுக்குள்ளே க்ளைமக்சா...) படம் செம பாஸ்ட் போல இருக்கே... சொல்லுங்க க்ளைமாக்ஸ்ல
SAC: என்னங்க திடீர்னு கேட்டுடீங்க. விஜய் வராரு இப்போதைக்கு அதான் கிளைமாக்ஸ். ஆனா நெறைய பிளான் இருக்கு... என்ன கதை புடிச்சி இருக்கா
நடிகர்: ஆங் super.... ஆனா இந்த ரோல நான் பண்ணுறத விட ரஜினி பண்ணுனா நல்லா இருக்கும். (சாவுடி...)
SAC: Well said super idea... இத ஏன் நான் யோசிக்கல. பாவம் குசேலன் flop ஆனதிலேந்து அவருக்கும் ஒரு break இல்லாம இருக்காரு. இந்த சமயத்துல இளைய தளபதி தான் அவரை தூக்கி விட முடியும். உடனே கெளம்புறேன்.
நடிகர்: (கெளம்புங்க காத்து வரட்டும்) All the best sir.
Friday, January 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
super
ReplyDelete